காசா பகுதிக்கான நுழைவாயிலை இஸ்ரேல் திறக்குமாறு ஐ.நா.வின் வேண்டுகோள்
2024-03-07 10:11:32

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதால் காசாவில் ஏராளமான மக்களுக்கு உணவு தடைப்பட்டுள்ளது.

வடக்கு காசா பகுதியில் மக்களுக்கான உதவிகள் பற்றாக்குறை உள்ளது. கடந்த சில நாட்களில் நீர் சத்து இழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர் என்று பாலஸ்தீனக் காசா பகுதியின் சுகாதாரத் துறை மார்ச் 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிகளை காசா பகுதிக்குள் சுமுகமாக நுழைய அனுமதித்து, கடுமையான மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்கும் வகையில், காசா பகுதிக்கான நுழைவாயில்களை இஸ்ரேல் திறக்குமாறு ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அலுவலகம் 6ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தது.

சாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் போதுமான உணவை வழங்கும் திறன் ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அலுவலகத்திற்கு உண்டு. காஆனால் உணவை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இஸ்ரேல் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்படுவதால் அவை காசா பகுதிக்குள் நுழைய முடியவில்லை என்று இந்த அலுவலகத்தின் அவசர விவகாரத் துறை இயக்குநர் சமீர் அப்துல் ஜாபீர் தெரிவித்தார்.