நாட்டில் பண வீக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளது:அமெரிக்க பெடரல் ரிசர்வ் வாரியம்
2024-03-07 20:34:48

இவ்வாண்டின் ஜனவரியிலிருந்து, அமெரிக்கப் பொருளாதாரம் சற்று வளர்ச்சி அடைந்துள்ளதோடு, பண வீக்கத்தால் ஏற்பட்ட நிர்பந்தம் இன்னும் பரவலாக நிலவுகிறது என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 6ஆம் நாள் வெளியிட்ட முழு நாட்டு பொருளாதார நிலைமைக்கான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள 12 வட்டார ரிசர்வ் வங்கிகளின் புதிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், தி பீஜ் புக் என்று அழைக்கப்படும் இந்த ஆயவு அறிக்கை உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 8முறை பீஜ் புக் அறிக்கையை வெளியிட்டு வருகின்றது. வட்டார ரிசர்வ் வங்கிகள் வழியாக, அமெரிக்கா நாடு முழுவதும் பொருளாதார நிலைமை பற்றி அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி முழுமையாக அறிந்து கொள்கிறது. இதனால், இது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை சார் கூட்டத்துக்கு முக்கியக் கருத்து ஆதரவை அளிக்கிறது.