சீனாவின் தூதாண்மை கொள்கை மற்றும் வெளியுறவு குறித்து வாங்யீ கருத்து
2024-03-07 14:39:06

சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டம், மார்ச் 7ஆம் நாள் முற்பகல்,  நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சீனாவின் தூதாண்மைக் கொள்கை மற்றும் வெளியுறவு குறித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில்,

2023ஆம் ஆண்டு, சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்புகளின் பல்வேறு நிலையிலான பரிமாற்றமும் பேச்சுவார்த்தையும் மீண்டும் தொடங்கி உள்ளது. இரு தரப்புகளுக்கிடையில் அடிப்படை மோதலும் நிலவியல் நெடுநோக்கு மோதலும் காணப்படவில்லை. கருத்து வேற்றுமையுடன் ஒப்பிடுகையில், இரு தரப்புகளுக்கிடையில் ஒத்த நலன்கள் அதிகம்.  உலகில் சீன-ஐரோப்பிய கூட்டு நலன் பெறும் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படால் முகாம் பகைமை நனவாக்கப்படாது. இரு தரப்பும் வெளிநாட்டு திறப்பை நடைமுறைப்படுத்தி, கூட்டு நலன்களை நனவாக்கினால், உலகமயமாக்கலுக்கு எதிரான நிலை காணப்படவில்லை என்றார் அவர்.