உலகின் அமைதி, நிதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஆற்றலாக சீனா உறுதியாக பங்காற்றும்: வாங்யீ
2024-03-07 10:34:25

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இதில் கூறுகையில், மாற்றங்கள் மற்றும் சிக்கல் நிறைந்த சர்வதேச சூழலை எதிர்கொண்டு, உலகின் அமைதி, நிதானம் மற்றும் முன்னேற்றத்துக்கான ஆற்றலாகச் சீனா உறுதியாக பங்காற்றும் என்றார்.

வரலாற்றின் சரியான பக்கத்திலும் மனிதகுலத்தின் நாகரிகங்களின் முன்னேற்ற பக்கத்திலும் சீனா உறுதியாக நின்று, அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியான கொடியை உயரமாகப் பிடித்துக்கொண்டு உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதியாகப் பேணிக்காப்பதோடு, சுய வளர்ச்சியைச் சீனா நனவாக்கி வருகிறது. அதே வேளையில், சுய வளர்ச்சி மூலம் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேலும் நன்கு பேணிக்காக்கவும் சீனா பாடுபட்டு வருகிறது என்றும் வாங்யீ தெரிவித்தார்.