சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து அமெரிக்கா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் : சீன வெளியுறவு அமைச்சர்
2024-03-07 11:16:16

அமெரிக்காவுக்கான சீனாவின் கொள்கைகள் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் இருக்கின்றன. அதேவேளையில், சீனாவின் வளர்ச்சியை புறநிலையிலும் பகுத்தறிவுடனும் பார்த்து, சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மார்ச் 7ஆம் நாள் வலியுறுத்தினார்.

தேசிய மக்கள் பேரவையின் 2024ஆம் ஆண்டுக் கூட்டத் தொடரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவினருமான வாங்யீ செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இதைத் தெரிவித்தார்.

சொல்வது ஒன்று செய்வது வேறொன்று என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தால், வல்லரசின் நம்பகத்தன்மை எங்கே உள்ளது? சீனா என்ற சொல்லைக் கேட்டவுடன், பதற்றமாகவும் கவலையாகவும் இருந்தால், அமெரிக்காவின் சுயநம்பிக்கை எங்கு உள்ளது? அமெரிக்கா தனது செழுமையை மட்டுமே நிலைநிறுத்தி, வேறு நாட்டின் இயல்பான வளர்ச்சியை அனுமதிக்காமல், சர்வதேச நீதி எங்கு உள்ளது?  உயர் மதிப்புள்ள தொழில் சங்கிலியில் ஏகபோகம் செலுத்தும் அமெரிக்கா, சீனாவை கீழ்மட்டத்தில் நீடிக்க அனுமதிக்கிறது. இத்தகைய சூழில் நியாயமான போட்டி எங்கு உள்ளது?  என கேள்விகளை வாங்யீ செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவுக்கு எழுப்பினார்.