இன்று தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடரில் 2ஆவது முழு அமர்வு
2024-03-08 17:27:07

சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த முழு அமர்வில் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி, உச்ச மக்கள் நீதிமன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றம் ஆகியவற்றின் பணி அறிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டன.

கடந்த ஆண்டில் மொத்தம் 34 சட்ட ரீதியான வழக்குகள் பரிசீலனை செய்யப்பட்டு, 21 நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில், 6 சட்டங்களை உருவாக்குவது, 8 சட்டங்களைத் திருத்தம் செய்வது, சட்ட விவகாரங்கள் தொடர்புடைய 7 வழக்குகளில் முடிவு எடுப்பது ஆகியவை அடக்கம் என்று தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023ஆம் ஆண்டில், உச்ச மக்கள் நீதிமன்றம் மொத்தம் 21,081 வழக்குகளை பெற்று கிடைத்து, 17,855 வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளது. இவை, 2022ஆம் ஆண்டை விட முறையே 54.6 சதவீதம் மற்றும் 29.5 சதவீதம் அதிகம் என்று உச்ச மக்கள் நீதிமன்றத்தின் பணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டில், நாடளவில் வழக்கறிஞர் மன்றங்கள் 42 லட்சத்து 53 ஆயிரம் வழக்குகளைப் கையாண்டன. இது 2022ஆம் ஆண்டை விட 28.9 சதவீதம் அதிகரித்துள்ளது என்று உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.