இந்தியாவின் கர்நாடகாவில் கார்களை கழுவதற்கு குடிநீரை பயன்படுத்த தடை
2024-03-09 16:16:17

இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில், குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதால், கார்களைக் கழுவுதல், தோட்டக்கலை மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் உள்ளிட்ட பிற நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்த கடந்த வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறுபவர்களுக்கு 60 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்க, கர்நாடக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் முடிவு செய்துள்ளது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே பெங்களூரு நகரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பருவமழை காலத்தில், குறைந்த மழைபொழிவின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரு நகரம் இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.