சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடரின் 3ஆவது முழு அமர்வு நடைபெற்றது
2024-03-09 19:52:10

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடரின் 3ஆவது முழு அமர்வு மார்ச் 9ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான வாங் ஹுநிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 14 உறுப்பினர்கள் உரை நிகழ்த்தினர்.

உறுப்பினர் வெய் சியௌதொங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி, புலனாய்வு மற்றும் ஜனநாயக கண்காணிப்பை ஆழமாக மேற்கொண்டு, உறுப்பினர்கள் பங்காற்றி, பிரச்சினைகளை உண்மையாக வெளியிட்டு, கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்றார்.

உறுப்பினர் டோல்கர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அக்கறை மற்றும் நாட்டின் மக்களின் உதவியுடன், ஷி ட்சாங்கில் பல்வேறு தேசிய இன மக்களுக்கிடையிலான தொடர்பு விரிவாகி வருகிறது. சமூக நிலைமை நிதானமாக உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்துள்ளது. புதிய சோஷலிச ஷி ட்சாங் கட்டுமானத்தில் பங்கெடுக்கின்ற ஆற்றல் அதிகரித்து வருகிறது என்றார்.

உறுப்பினர் ஃபூ ட்சிகுவான் கூறுகையில், தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பதும், அமைதி, வளர்ச்சி, பரிமாற்றம், ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பெற்று, போர், வீழ்ச்சி, பிரிவினை, பகைமை ஆகியவற்றைத் தடுப்பதும், தைவான் மக்களின் முக்கிய விருப்பமாகும் என்றார்.