உக்ரைன் பிரச்சினை குறித்து சீனா கருத்து
2024-03-09 19:59:32

உக்ரைன் பிரச்சினை குறித்து ஐ.நா பாதுகாப்பவை 8ஆம் நாள் நடத்திய அவசர பரிசீலனை கூட்டத்தில் ஐ,நாவுக்கான சீனத் துணை நிரந்தர பிரதிநிதி கெங் சுவாங் உரை நிகழ்த்தினார். தொடர்புடைய தரப்புகள் நேரடி தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, நடைமுறைக்கு வரக்கூடிய தீர்வு முறையை கூட்டாக நாட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பல்வேறு தரப்புகள் ஐ.நா சாசனத்தின் நோக்கம் மற்றும் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒன்றுக்கொன்று கவனம் செலுத்தும் பிரச்சினையை சரியாக தீர்த்தாலும், ஐரோப்பாவில் சமமான, பயனுள்ள மற்றும் தொடரவல்ல பாதுகாப்பு கட்டுக்கோப்பு உருவாக்கப்பட முடியும் என்று அவர் தெரிவித்தார். தொடர்புடைய தரப்புகள் கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, பொது கருத்துகளை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் எனவும், சர்வதேச சமூகம் தூதாண்மை முயற்சிகளை வலுப்படுத்தி, நிலைமை தணிவடைவதை முன்னேற்றி, அரசியல் முறையில் இப்பிரச்சினையைத் தீர்க்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் கெங் சுவாங் தெரிவித்தார்.