சீனாவில் இருப்புப்பாதை திட்டப்பணிகளின் சீரான கட்டுமானம்
2024-03-09 19:18:32

இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல் பிப்ரவரி திங்கள் வரை, சீனாவின் இருப்புப்பாதையின் நிலையான சொத்து முதலீட்டுத் தொகை, 6520 கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 9.5 விழுக்காடு அதிகரித்தது. இருப்புப்பாதையின் கட்டுமானம் தரமாகவும் பயனுள்ள முறையிலும் முன்னேற்றப்பட்டு வருகிறது. முக்கிய திட்டப்பணிகளின் கட்டுமானம் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இருப்புப்பாதையின் நவீனமயமாக்க அடிப்படை வசதி முறைமை விரைவாக உருவாக்கப்பட்டு வருகிறது என்று சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் 9ஆம் நாள் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.