மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமையை உயர்த்துவதற்கான உலகத் திட்டம் துவக்கம்
2024-03-09 16:43:10

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமையை உயர்த்துவதற்கான உலகத் திட்டத்தை, ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் மார்ச் 8ஆம் நாள் துவங்கி வைத்தார். மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் தேவை மற்றும் நலனை, ஐ.நா பணியின் மைய இடத்தில் வைத்து, கொள்கையை வகுப்பது, தலைவர் பணித்தலங்களில் பெண்களின் விகிதத்தை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை முன்னேற்றுவது, இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வறுமை பிரச்சினையிலுள்ள பாலின இனவெறியைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது. இது குறித்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில், 2030ஆம் ஆண்டு 34 கோடிக்கும் மேலான மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் தீவிர வறுமையில் வாழ்வார்கள் என்று குட்ரேஸ் வலியுறுத்தினார்.