இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 2928 சீன-ஐரோப்பா சரக்கு தொடர் வண்டிகள் இயக்கம்
2024-03-10 19:36:40

இவ்வாண்டின் ஜனவரி முதல் பிப்ரவரி வரை, சீனாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே சீன சரக்கு தொடர் வண்டிகள் 2928 முறையாக இயங்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 9 விழுக்காடு அதிகரித்தது. இதன் மூலம் 3 லட்சத்து 17 ஆயிரம் கொள்கலன்களான சரக்குகள் அனுப்பப்பட்டன. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 10 விழுக்காடு அதிகரித்தது. 2024ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் இறுதி வரை, சீனாவின் 120 நகரங்களிலிருந்து ஐரோப்பாவின் 25 நாடுகளின் 219 நகரங்களுக்கு இந்தச் சரக்கு தொடர் வண்டிகள் செல்கின்றன என்று சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.