ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர் மற்றும் விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
2024-03-11 10:47:38

ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் புதிய சுற்று வேலை நிறுத்தம் நடத்தவுள்ளனர். இதில் சரக்கு ரயில் ஓட்டுநர்கள் 11ஆம் நாள் 18 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பயணியர் ரயில் ஓட்டுநர்கள் 12ஆம் நாள் 2 மணி முதல், 24 மணி நேர வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர் தொழிற்சங்கம் 10ஆம் நாளிரவு தெரிவித்தது. ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக ஜெர்மனியின் ரயில் ஓட்டுநர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் தற்போது ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. தவிரவும், இச்சங்கம் நடத்தும் 6ஆவது வேலை நிறுத்தமாகும்.

12,13 ஆகிய நாட்களில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்று லுஃப்தான்சா நிறுவனத்தைச் சேர்ந்த விமான பணியாளர்கள் சங்கம்  9ஆம் நாள் தெரிவித்துள்ளது.