பாகிஸ்தான் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஆசிப் அலி சர்தாரிக்கு சீனா வாழ்த்து
2024-03-11 17:20:56

பாகிஸ்தானின் புதிய அரசுத் தலைவர் பதவி ஏற்பது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், பாகிஸ்தான் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஆசிப் அலி சர்தாரிக்கு சீனா வாழ்த்து தெரிவிக்கிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். சீன-பாகிஸ்தான் உறவின் வளர்ச்சிக்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பாகிஸ்தானுடன் இணைந்து, சீன-பாகிஸ்தான் பாரம்பரிய நட்புறவைப் பரவல் செய்து, பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளை முன்னேற்றி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு மேலும் பெரிய வளர்ச்சியைப் பெறுவதைத் தூண்டி, புதிய யுகத்தில் மேலும் நெருக்கமான சீன-பாகிஸ்தான் பொது எதிர்காலச் சமூகக் கட்டுமானத்தை விரைவுபடுத்த சீனா விரும்புகிறது என்றார்.