ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பம்
2024-03-11 17:15:05

சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய தாராள வர்த்தக சங்க  நாடுகளுடன் இந்தியா ஞாயிற்றுக்கிழமை வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இவ்வொப்பந்தத்தின் படி, அடுத்த 15 ஆண்டுகளில் பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஐரோப்பிய தாராள வர்த்தக சங்க நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்கின்றது. இதுபோன்ற முதலீடுகள் மூலம் இந்தியாவில் 10 இலட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பிய தாராள வர்த்தக சங்க நாடுகளில், சுவிட்சர்லாந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.