ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடான உக்ரைன்
2024-03-11 15:37:42

மார்ச் 11ஆம் நாள், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் உக்ரைன் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடாக மாறியுள்ளது.

2022ஆம் ஆண்டின் பிப்ரவரி முதல், குறைந்தது 30 நாடுகள் உக்ரேனுக்கு இராணுவ உதவியாக முக்கிய ஆயுதங்களை வழங்கி வருகின்றன. 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உக்ரைன் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடாகவும், உலகின் நான்காவது அதிக அளவில் ஆயுத இறக்குமதி செய்யும் நாடாகவும் மாறியுள்ளது என்று இந்த அறிக்கை காட்டுகின்றது.

உக்ரைனின் ஆயுத வினியோக நாடுகளில் அமெரிக்கா 39 விழுக்காடும், ஜெர்மனி 14 விழுக்காடும், போலந்து 13 விழுக்காடும் வகிக்கின்றன.