இலங்கையில் யானைகளைப் பாதுகாப்பதற்காக 4,500 வளர்ச்சி அதிகாரிகள் நியமனம்
2024-03-12 16:59:20

இலங்கையில் யானை பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக 4,500 வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக, வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இலங்கை அரசால் நிறுவப்பட்டுள்ள யானை வேலிகளை பாதுகாப்பதே இந்த அதிகாரிகளின் முக்கிய பணியாகும் என்று இவ்வமைச்சர் தெரிவித்தார்.

மார்ச் 21ஆம் நாள் அனுசரிக்கப்படும் சர்வதேச காடுகள் தினத்தையோட்டி, இலங்கையில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு செடியை விநியோகிக்கும் ஒரு முயற்சியை ஏற்பாடு செய்துள்ளதாக வன்னியாராச்சி கூறினார். 

அதிகாரபூர்வ தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு இலங்கையில் சுமார் 400 யானைகள் இறந்துள்ளன. இதில் பாதி இறப்புகள் மனித-யானை மோதல்களால் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.