அங்கோலா அரசு தலைவரின் சீனப் பயணம் குறித்து சீன கருத்து
2024-03-12 18:35:40

அங்கோலா குடியரசுத் தலைவர் லோரன்சோ அழைப்பை ஏற்று மார்ச் 14 முதல் 17ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 12ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில் சீன-அங்கோலா பராம்பரிய நட்புறவு தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் நடைபெற்றது. தற்போது இரு நாட்டுறவு சீரான வளர்ச்சி போக்கினை நிலைநிறுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை ஆழமாகி, எதார்த்த ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. இது இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.

அரசுத் தலைலர் லோரன்சோவின் பயணத்தின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் லோரன்சோவும் பேச்சுவார்த்தை நடத்தி, ஒத்துழைப்பு ஆவணத்தில் கையொப்பமிடும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும், சீன-அங்கோலா உறவின் பன்முக ஆழ்ந்த வளர்ச்சிக்கு இப்பயணம் புதிய இயக்கு ஆற்றலை உட்புகுத்தி, இரு நாட்டு நட்பார்ந்த ஒத்துழைப்பு புதிய முன்னேற்றம் அடைவதைத் தூண்டும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.