ஜப்பான் கதிரியக்க நீர் கடலில் வெளியேற்றம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-03-12 17:20:01

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மார்ச் 12ஆம் நாள் கூறுகையில், ஜப்பானின் ஃபுகுஷிமாகென் அணு மின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீர் கடலில் வெளியேற்றப்படுவது, மனித குலத்தின் ஆரோக்கியம், உலக கடலின் சுற்றுச்சூழல், சர்வதேசப் பொது நலன் ஆகியவற்றுடன் தொடர்புடையது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, உணவு பாதுகாப்பு மற்றும் மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது, நியாயமானது மற்றும் இன்றியமையானது என்றார்.

மேலும், சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு ஜப்பான் பெரும் முக்கியத்துவம் அளித்து, அண்டை நாடுகள் உள்ளிட்ட நலனுடன் தொடர்புடைய நாடுகள், நீண்டகாலக் கண்காணிப்பில் பயன்தரும் முறையில் பங்கெடுக்கும் முறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.