அமெரிக்கப் பொதுத் தேர்தல் பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-03-13 17:06:14

ஜோன் பைடன் மற்றும் டொனல்ட் டிரம்ப், இவ்வாண்டின் அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலின் வேட்பாளர்களாக உள்ளனர்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மார்ச் 13ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கப் பொதுத் தேர்தல், அமெரிக்காவின் உள் விவகாரமாகும். சீனா இதில் தலையிடாது. சீன-அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சி இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. யார் அமெரிக்க அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இரு நாட்டு உறவின் நிதானமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாடுகளுக்கு மேலும் நன்றாக நன்மை பயக்க சீனா விரும்புகிறது என்றார்.