மத்திய கிழக்கு பிரதேசத்தின் சூழ்நிலை பற்றிய சீனாவின் கருத்து
2024-03-13 19:25:27

தற்போதைய மத்திய கிழக்கு பிரதேசத்தின் சூழ்நிலை மற்றும் இதில் சீனாவின் பங்கு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மார்ச் 13ஆம் நாள் கூறுகையில், மத்திய கிழக்கு நாடுகளின் நண்பராக சீனா திகழ்கின்றது. இப்பகுதியின் சூழ்நிலையில் சீனா பெரும் கவனம் செலுத்தி, மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து, உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவற்றைச் செயல்படுத்தி, பிரதேசத்தின் நிரந்தர அமைதி மற்றும் நிதானத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளுடன் பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, மேலும் உயர்தரக் கூட்டு வெற்றியை நனவாக்கி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் நன்றாக நன்மை பயக்க சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.