தைவானின் மீதான மத்திய அரசின் கொள்கை தெளிவானது மற்றும் நிலையானது:சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம்
2024-03-13 11:11:27

சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் 13ஆம் நாள் செய்தியாளர் நடத்திய கூட்டத்தில் தைவானின் மீதான மத்திய அரசின் கொள்கை தெளிவானது மற்றும் நிலையானது என்று தெரிவிக்கப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கிய கருத்துக்களின் எழுச்சியை உணர்வுபூர்வமாகக் கற்றுக்கொண்டு, இருகரை உறவுக்கு உறுதியாக முன்முயற்சி எடுத்து, தாய்நாட்டின் ஒன்றிணைப்பை முன்னேற்ற வேண்டும் என்று இப்பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் சென் பின் ஹுவா தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் ஜியு எர் என்ற ஒத்த கருத்தில் ஊன்றி நின்று, தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை நடவடிக்கை மற்றும் வெளிப்புறச் சக்திகளின் தலையீட்டை உறுதியாக எதிர்த்து, இரு கரை பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பரிமாற்ற ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் இரு கரையின் ஒன்றிணைந்த வளர்ச்சியை ஆழமாக்கி, இரு கரை சக நாட்டவர் உள்ளிட்ட அனைத்து சீன மக்களையும் ஒன்றிணைத்து, தாய்நாட்டின் சமாதான ஒன்றிணைப்பைக் கூட்டாக முன்னேற்றி, தாய்நாட்டின் ஒன்றிணைப்பு, தேசிய இனத்தின் மாபெரும் மறுமலர்ச்சி ஆகிய வரலாற்று இலட்சியத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.