ஜி 20 நாடுகளுக்கு சீனா வேண்டுகோள்
2024-03-13 19:01:44

ஜி 20 நாடுகள், உலகப் பொருளாதார அதிகரிப்பைத் தூண்ட வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர துணை பிரதிநிதி தெய் பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்ச் 12ஆம் நாள் ஜி 20 நாடுகளின் பணி பற்றிய கூட்டத்தில் அவர் கூறுகையில், தற்போது உலகப் பொருளாதார மீட்சி பலவீனமாக இருக்கிறது. உலகளாவிய அறைகூவல்கள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன. ஜி 20 நாடுகள், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரத்தின் வலுவான, தொடரவல்ல, இணக்கமான மற்றும் சமமான அதிகரிப்பை முன்னேற்ற வேண்டும் என சீனா எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஜி 20 நாடுகளின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான பிரேசிலுக்கு சீனா வாழ்த்து தெரிவிக்கிறது என்றும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு, ஜி 20 உச்சி மாநாட்டை பிரேசில் வெற்றிகரமாக நடத்தி, உலகப் பொருளாதார மீட்சிக்கும் உலகின் செழுமை மற்றும் வளர்ச்சிக்கும் பங்காற்றுவதற்கு ஆதரவளிக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.