காசா பகுதியில் உள்ள ஐ.நாவின் உணவு விநியோக மையத்தில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்
2024-03-14 11:27:13

மார்ச் 13ஆம் நாள், தென் காசா பகுதியின் ரஃபா நகரில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் ஒரு உணவு விநியோக மையம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த மையம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்நிறுவனத்தின் அதிகாரி சாமி•அபு•சலீம் தெரிவித்தார். நாங்கள் ரமலான் மாதத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உணவு விநியோகம் செய்த போது, திடீரென இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளோம். ஆயுதம் இல்லாத மக்களும், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்த மக்களும் இதில் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.