நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வாங்யீ பயணம்
2024-03-14 17:33:07

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மார்ச் 14ஆம் நாள் கூறுகையில், நியூசிலாந்தின் துணைத் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மார்ச் 17 முதல் 21ஆம் நாள் வரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் வாங்யீ பயணம் மேற்கொள்ளும் போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்குடன் 7வது சீன-ஆஸ்திரேலியத் தூதாண்மை மற்றும் நெடுநோக்கு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று தெரிவித்தார்.