சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசா இல்லாத கொள்கை
2024-03-14 10:34:20

மார்ச் 14ஆம் நாள் முதல் சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து வந்த சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகளுக்கு விசா இல்லாத கொள்கையைச் சீனா செயல்படுத்துகின்றது.

தொடர்புடைய ஏற்பாடுகளின் படி, 2024ஆம் ஆண்டின் மார்ச் 14ஆம் நாள் முதல் நவம்பர் 30ஆம் நாள் வரை, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வந்த சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகள், வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்வையிடுவது போன்ற நோக்கங்களுக்காக 15 நாட்களுக்கு குறைவாக விசா இல்லாமல் சீனாவுக்குள் நுழையலாம்.

மார்ச் துவக்கம் வரை, 157 நாடுகளுடன் பல்வேறு பாஸ்போர்ட்களை உள்ளடக்கிய ஒன்றுக்கு ஒன்று விசா விலக்கு ஒப்பந்தங்களில் சீனா கையொப்பமிட்டுள்ளது.