அமெரிக்காவில் நடைபெற்ற உலக ஊடக உரையாடல் பற்றிய சிறப்பான நிகழ்வு
2024-03-14 17:37:10

அமெரிக்காவில் சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த உலக ஊடக உரையாடல் பற்றிய சிறப்பான நிகழ்வு மார்ச் 13ஆம் நாள் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங், அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ஷியே ஃபொங் அகியோர் காணொளியின் வழியாக உரை நிகழ்த்தினர். அமெரிக்காவின் அரசியல், வணிகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 100 விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, “சீனாவில் முதலீடு, வளர்ச்சியின் பகிர்வு”என்ற தலைப்பில் ஆழமாகப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர்.

ஷென் ஹாய்சியொங் கூறுகையில், சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. புதிய தரமான உற்பத்தி திறன் என்ற முக்கிய கருத்தை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்தார். நவீனமயமாக்கத் தொழில் அமைப்புமுறையின் கட்டுமானத்தைப் பெரிதும் முன்னேற்றி, புதிய தரமான உற்பத்தித் திறனின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது, இவ்வாண்டின் சீன அரசுப் பணியில் முக்கிய கடமையாகும். 2024ஆம் ஆண்டு, சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டு மக்கள் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை மேற்கொள்கின்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்கு சீன ஊடகக் குழுமம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

மேலும், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, கல்வி பரிமாற்றம், சீனச் சந்தையின் வாய்ப்பு, தொழில் துறையின் எதிர்காலம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் விவாதம் நடத்தினர்.