ஒத்துழைப்பின் மூலம் வளர்ச்சியை தூண்டுதல்: ஐ.நா மனித உரிமை மன்றம்
2024-03-14 14:43:04

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 55ஆவது கூட்டத் தொடரின் போது, அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புகளின் மூலம், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்துவது என்ற தலைப்பிலான கிளை கூட்டம் மார்ச் 12ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்றது. சீனச் சர்வதேச பரிமாற்றச் சங்கம் உள்ளிட்டவை இக்கூட்டத்தை நடத்தின. மனித உரிமை துறையின் அரசு சாரா ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒத்த கருத்துக்களை விரிவாக்கி, உலகில் தொடரவல்ல வளர்ச்சி மற்றும் மனித உரிமை இலட்சியத்திற்கு அரசு சாரா அறிவுத்திறமையையும் சக்தியையும் அதிகரிப்பது என்பது இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி சிந்தனையைப் பின்பற்றி, வளர்ச்சியுடன் மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து மேம்படுத்த வேண்டும். மனித உரிமைப் பாதுகாப்பை விரைவுபடுத்தி, மக்களின் இன்பமான உணர்வை அதிகரித்து, மக்களின் முழுமையான வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று சீனாவின் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.