இலங்கை விவசாயத்தை மேம்படுத்த 7,50,000 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு
2024-03-14 17:43:21

2024ஆம் ஆண்டில் உள்ளுர் விவசாய நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்காக, வீட்டுத்தோட்டத் திட்டங்களுக்காக 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கையின் விவசாயத்துறை அமைச்சர் மோகன் பிரியதர்ஷன டி சில்வா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

விவசாய விளைச்சலை அதிகரிப்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், எதிர்வரும் அறுவடை காலத்தில் 36 இலட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் இவ்வமைச்சர்  தெரிவித்தார். இலங்கையில் அரிசிக்கான வருடாந்திர தேவை 24 லட்சம் மெட்ரிக் டன் என்று அவர் மேலும் கூறினார்.

விவசாயத் திறனை மேம்படுத்த விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிர்களை பன்முகப்படுத்த இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு சீரான மற்றும் நம்பகமான நீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், இலங்கையின் நீர்ப்பாசன முறையை மேம்படுத்த  சுமார் 14 இலட்சம் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இவ்வமைச்சர் மேலும் கூறினார்.