யாங்சி ஆற்றுக் கழிமுக பிரதேசத்தில் அந்நிய வர்த்தகத்தின் புதிய சாதனை
2024-03-15 19:24:36

ஷாங்காய் சுங்கத் துறை வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில், யாங்சி ஆற்றுக் கழிமுக பிரதேசத்தில் அன்னிய வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி யுவானை எட்டி, வரலாற்றில் புதிய சாதனையைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் இருந்ததை விட 10.5 விழுக்காடு அதிகரித்து, நாட்டின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகையில் 37.3 விழுக்காடு வகித்துள்ளது.

இதில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பங்கெடுக்கும் நாடுகளின் மீதான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13.1 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், புதிய உயர் தொழில் நுட்ப உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 58 ஆயிரத்து 117 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.5 விழுக்காடு அதிகமாகும்.