ஏமென் சூழ்நிலை குறித்து சீனா வேண்டுகோள்
2024-03-15 19:52:21

ஏமென் மீது ஆயுத ஆற்றலைப் பயன்படுத்தும் அதிகாரத்தை ஐ.நா பாதுகாப்பவை எந்த நாட்டுக்கும் வழங்கவில்லை என்று ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி கெங் சுவாங் 14ஆம் நாள் ஏமென் பிரச்சினை பற்றிய பாதுகாப்பவையின் வெளிப்படைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், தற்போது செங்கடல் சூழ்நிலை தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. தொடர்புடைய தாக்குதல் மற்றும் ராணுவ நடவடிக்கை, மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளன. சீனா இது பற்றி வருத்தம் தெரிவிக்கிறது. பல்வேறு நாடுகளின் வணிக கப்பல்கள் சர்வதேச சட்டத்தின்படி செங்கடல் பரப்பில் பயணிக்கும் உரிமையை ஹெளதி ஆயுதப் படை மதித்து, தொடர்புடைய தாக்குதல் மற்றும் தடங்கலை உடனடியாக நிறுத்தி, தொடர்புடைய தரப்புகள் கட்டுப்பாட்டுடன் இருந்து, பதற்ற சூழ்நிலையைத் தீவிரமாக்கும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

ஏமெனில் மனித நேய நெருக்கடி இன்னமும் தொடர்கிறது. ஏமெனின் மனித நேயம் மற்றும் வளர்ச்சி மீதான ஒதுக்கீட்டை சர்வதேச சமூகம் அதிகரிக்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்து, உலக உணவு திட்ட அலுவலகம் ஏமெனின் வடபகுதியில் உள்ள மனித நேய மீட்புதவியை வெகுவிரைவில் மீட்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.