பாலஸ்தீன அகதிகள் முகாமுக்கான நிதியை விரைவில் மீட்டெடுக்க வேண்டுகோள்
2024-03-15 09:54:58

இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய பெரிய தாக்குதலில் அண்மை கிழக்குப் பகுதிக்கான ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகள்  நிவாரணம் மற்றும் பணி முகாமைச் சேர்ந்த 12 பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதனையடுத்து அமெரிக்கா, கனடா முதலிய பத்துக்கும் மேற்பட்ட மேலை நாடுகள், இம்முகாமுக்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன.

சில நாடுகள் இம்முகாமுக்கான நிதியை மீண்டும் அளிக்கத் தொடங்கினாலும், நிறுவனங்கள் வேலை நிறுத்தும் இடர்பாட்டை இன்னும் எதிர்கொண்டு வருவதாக இம்முகாமின் தொலைத்தொடர்பு பணியாளர் ஜூலியட் துமா சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், இம்முகாமுக்கான நிதியை விரைவில் மீட்டெடுக்குமாறு பல்வேறு நாடுகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

காசாவில் உள்ள 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சர்வதேச மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கு இம்முகாமின் பணிகள் இன்றியமையாதவை. ஈடுசெய்ய முடியாதவை. நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலைமையில், அதன் முக்கியச் சேவைகளை நிலைநிறுத்த மட்டுமே முகாம் பாடுபட்டு வருவதாகவும் துமா தெரிவித்தார்.