தேசிய பாதுகாப்பு செலவை அதிகரித்து வருகின்ற நேட்டோ
2024-03-15 17:46:59

நேட்டோ அமைப்பு மார்ச் 14ஆம் நாள் வெளியிட்ட 2023ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, தேசிய பாதுகாப்பு செலவை நேட்டோ உறுப்பு நாடுகள் தொடர்ந்து அதிகரித்து, மொத்த செலவுத் தொகை சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் மற்றும் கனடாவின் தேசிய பாதுகாப்பு செலவு கடந்த 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2023ஆம் ஆண்டு, வேறுபட்ட அளவிலான 130 முறை கூட்டு இராணுவப் பயிற்சிகளை நேட்டோ அமைப்பு நடத்தியது. உறுப்பு நாடுகள் மொத்தம் 1029 முறை உள்நாட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, நேட்டோவின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 32 ஆகும்.