தானிய உதவி தேவைப்படும் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்கள்
2024-03-15 09:57:42

பயிர்களின் எதிர்காலம் மற்றும் தானிய நிலைமை பற்றிய புதிய அறிக்கை ஒன்றை ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையின்படி, பிரதேச மோதல், மோசமான காலநிலை போன்ற காரணிகளால் உலகளவில் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு வெளிப்புற தானிய உதவி தேவைப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.  தானிய உதவி தேவைப்படும் நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பட்டியலில் 33 ஆப்பிரிக்காவின் நாடுகள், 9 ஆசிய  நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரதேசத்தில் உள்ள 2 நாடுகள், ஐரோப்பாவின் 1 நாடு முதலியவை இடம்பெற்றுள்ளன.

அண்மை கிழக்குப் பகுதி, மேற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்றவற்றில் மோதல் நிகழ்ந்ததால், அப்பகுதிகள் கடுமையான தானியப் பாதுகாப்பின்மைச் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. தவிரவும், வறட்சியான காலநிலையால், ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் நிலவும் தானியப் பாதுகாப்பின்மை நிலைமை மேலும் மோசமாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.