மனித உரிமை பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
2024-03-16 20:17:42

ஐ.நாவிலுள்ள சீனாவின் நிரந்திர பிரதிநிதியான தூதர் சென்சுயே 15ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமை செயற்குழுவின் 55ஆவது கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். மனித உரிமை லட்சியத்தில் சீனா பெற்றுள்ள சாதனைகளையும் அறிமுகப்படுத்தி, மனித உரிமை பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்தார்.

சீனா எப்பொழுதும் உலகளவில் மனித உரிமை நிர்வாகத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, சர்வதேச மனித உரிமை பேச்சுவார்த்தையையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றி வருகிறது. பல்வகை மனித உரிமைகளில் சமமாக கவனம் செலுத்தி, சரி சமமாக முன்னேற்றுவதை கருத்தில் கொண்டு, பொருளாதாரம் சமூகம் மற்றும் நாகரீகத்துறையில் உரிமையையும் வளர்ச்சி உரிமையையும் வெகுவிரைவில் நிறைவேற்ற சீனா  முயற்சி செய்கிறது. ஐ.நாவின் மனித உரிமை செயற்குழுவின் 54ஆவது கூட்டத்தில், சீனா உள்ளிட்ட 80 நாடுகள் முன்வைத்த தொடர்புடைய தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானம் பயனுள்ளதாக நிறைவேறி, தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு பங்காற்ற வேண்டுமென சீனா விரும்புவதாக, சென்சுயே தெரிவித்தார்.