ரஷிய அரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு மீது இணையவழி தாக்குதல்
2024-03-17 18:48:42

ரஷிய அரசுத் தலைவர் தேர்தல் வாக்கெடுப்பு தொடங்கிய பின்பு, ரஷியாவின் தொடர்புடைய அமைப்புமுறைகள் மற்றும் இணையத் தளங்கள் மீது பெருமளவிலான இணையவழி தாக்குதல் நடந்து வருவதாக ரஷிய மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் பாம்ஃபிலோவா 16ஆம் நாள் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தற்போதுவரை, தொலைதூர இணையவழி வாக்கெடுப்பு அமைப்புமுறை உள்ளிட்டவை மீது சுமார் ஒரு இலட்சத்து 60ஆயிரம் முறை தாக்குதல்களை ரஷிய தரப்பு தடை செய்துள்ளது. மேலும், ரஷிய மத்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மீது சுமார் 18ஆயிரம் இணையவழி தாக்குதல் நடந்துள்ளதை ரஷியா கண்டறிந்துள்ளது என்று தெரிவித்தார்.