வங்காளத்தேசத்தின் முதல் கடல்-தரை ஒருங்கிணைந்த மிக பெரிய எண்ணெய் சேமிப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
2024-03-18 09:51:07

மார்ச் 16ஆம் நாள் 220 கிலோமீட்டர் நீளமுடைய கடலடி தரை குழாய்கள் மூலம், கடல் டேங்கர்களில் இருந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெய் முதன்முறையாக அனுப்பப்பட்டதுடன், சீன நிறுவனம் கட்டியமைத்த வங்காளத்தேசத்தின் முதல் கடல்-தரை ஒருங்கிணைந்த மிகப் பெரிய எண்ணெய் சேமிப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் முழுமையாக இயங்குத் தொடங்கியது.

இத்திட்டம் 5 ஆண்டுகளில் கட்டியமைக்கப்பட்டு நிறைவடைந்தது. இந்த திட்டம் ஆண்டுக்கு 12.8 கோடி அமெரிக்க டாலர் கச்சா எண்ணெய் போக்குவரத்து செலவுகளை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்காளத்தேசத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆண்டுக்கு கச்சா எண்ணெயைக் கையாளும் திறன் தற்போதைய 15 இலட்சம் டன்னிலிருந்து 45 இலட்சம் டன்னாக அதிகரிப்பதற்கு முக்கியமான உத்தரவாதத்தை இது வழங்குகிறது.