2025ஆம் ஆண்டுக்குள் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மண்டல மேலாண்மை அமைப்பை நிறுவும் சீனா
2024-03-18 15:21:25

சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மண்டல மேலாண்மையை வலுப்படுத்துவது குறித்த அறிக்கையைச் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது அலுவலகம் மற்றும் சீன அரசவையின் பொது அலுவலகம் வெளியிட்டன. 2025ஆம் ஆண்டுக்குள் சீனா சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மண்டல மேலாண்மை அமைப்பை நிறுவும் என்றும், 2035ஆம் ஆண்டுக்குள் முழுமையான, மென்மையான மற்றும் திறமையான சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மண்டல மேலாண்மை அமைப்பை நிறுவி, சுற்றுச்சூழலின் மேம்பாட்டிற்கும், அழகான சீனா கட்டுமானம் என்ற இலக்கை நனவாக்குவதற்கும் வலுவான ஆதரவை வழங்கும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.