அமெரிக்க தூதரின் எதிர்மறைக் கூற்றை சீனா மறுத்துரைத்தது
2024-03-18 20:11:40

சீனாவிலுள்ள அமெரிக்க தூதர் பெர்னெஸ் அண்மையில் சீனா பற்றி தெரிவித்த எதிர்மறைக் கூற்றானது, சீன-அமெரிக்க தலைவர்கள் சன்ஃபிரான்சிஸ்கோ சந்திப்பில் உருவாக்கிய முக்கிய ஒத்தக் கருத்துகளுக்கு அத்துமீறிய வகையில் அமைந்துது. இது, இருநாட்டுறவின் சீரான நிதானமான வளர்ச்சிக்குத் துணைபுரியாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் சியென் 18ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

சீன-அமெரிக்க உறவு, வளர்ச்சிக்கு உதவும் போட்டி என்று சீனா எப்பொழுதும் கருதுகிறது. அமெரிக்கா, போட்டியிடுதலை சாக்குப்போக்காகக் கொண்டு, சீனாவின் நியாயமான வளர்ச்சி உரிமையைக் கட்டுப்படுத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.