ரஷிய அரசுத் தலைவர் தேர்தலில் புதின் வெற்றி
2024-03-18 09:33:59

ரஷிய மத்திய தேர்தல் ஆணையம் 18ஆம் நாள் அதிகாலை வெளியிட்ட புதிய தரவின்படி, அன்று வரை 90.15விழுக்காடு வாக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன. 4 வேட்பாளர்களில், தற்போதைய அரசுத் தலைவர் விளடிமிர் புதின் 87.21விழுக்காடான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். இந்நிலையில் இந்த அரசுத் தலைவர் தேர்தலில் அவர் ஏற்கனவே வென்றுவிட்டார் என்பது வெளிகாட்டப்பட்டுள்ளது.

அன்று காலை தேர்தல் தலைமையகத்தில் புதின் உரைநிகழ்த்திய போது அனைத்து வாக்காளர்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார். ரஷியா ஒரு பெரிய குடும்பம். வாக்காளர்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை நடப்பு தேர்தலின் முடிவு காட்டியுள்ளது. நாட்டின் அனைத்து கடமைகளும் நிறைவேற்றப்படும். ரஷியா முன்னோக்கி மேலும் வளரும். மேலும். வலிமையாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.