காசா மீதான மருத்தவ உதவியை அதிகரிக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு
2024-03-18 09:51:44

உலக சுகாதார அமைப்பின் தரவின்படி, 2023ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதத்தில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் ஏற்பட்டது முதல், காசா பிரதேசம் மற்றும் ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை பகுதியில் மருத்துவ உபகரணங்களைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நிகழ்ந்தன. காசாவில் பல மருத்துவமனைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் உள்ளூர் மருத்துவ அமைப்பு முறை இயல்பாக இயங்க முடியவில்லை. காசா பிரதேசத்தில் நோயாளிகளுக்கான ஆதரவு மற்றும் உதவியைச் சர்வதேச சமூகம் அதிகரிக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கான இயக்குநர் ஹானான் பால்கி 17ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில், தரை, வான் மற்றும் கடல்  எல்லையை நாங்கள் கூடிய விரைவில் தளர்த்த வேண்டும். குறிப்பாக தரை எல்லையை வேகமாக தளர்த்துவது காசா மக்களுக்கு மிக சாதகமாக இருக்கும். இந்த விஷயத்தைக் கூடிய விரைவில் தீர்க்க வேண்டுமென விரும்புவதாகத் தெரிவித்தார்.