சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் பணம் செலுத்துவது பற்றிய வழிகாட்டு அறிமுகம்
2024-03-18 20:01:28

சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் பணம் செலுத்துவது பற்றிய வழிகாட்டு தகவல்களை சீன மக்கள் வங்கி மார்ச் 14ஆம் நாள் வெளியிட்டது.

இந்தத் தகவல்களில், சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள், யூனியன் பே, விசா, மாஸ்டர்கார்டு உள்ளிட்ட வங்கி அட்டைகளை கொண்டிருந்தால், அத்தகு அட்டைகளைப் பயன்படுத்தக்கூடிய கடைகளில் அதனைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். குறிப்பாக, விற்பனை முனை(Pos) கொண்ட அனைத்து கடைகளிலும் யூனியன் பே அட்டையைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகின்றது.

மேலும், சீனாவில் செல்லிடப்பேசி வழியாக பணம் செலுத்தும் விவரங்களும் இந்த வழிகாட்டு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவுக்கு குறைவான பணம் செலுத்தினால், அடையாளம் காண வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.