ரஷிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புதினுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துக்கள்
2024-03-18 19:27:00

ரஷிய அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புதினுக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இது குறித்து ஷிச்சின்பிங் கூறுகையில்,

கடந்த ஆண்டுகளில், ரஷிய மக்கள் ஒற்றுமையுடன், அறைகூவல்களை எதிர்கொண்டு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் நிலையாக முன்னேற்றி வருகின்றனர். நீங்கள் மீண்டும் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதே, உங்கள் மீதான ரஷிய மக்களின் ஆதரவை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. உங்கள் தலைமையில், ரஷியா நாட்டு வளர்ச்சி மற்றும் கட்டுமானத் துறையில் மேலும் பெரிய சாதனைகள் படைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும், ரஷியாவுடன் நெருக்கமான தொடர்பை நிலைநாட்டுவதோடு, புதிய காலகட்டத்தில் இரு நாடுகளுக்கிடையேயான பன்முக நெடுநோக்கு சார் ஒத்துழைப்புக் கூட்டளியுறவை தொடர்ந்து சீராகவும் நிலையாகவும் வளர்க்க சீனா விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.