வட காசாவில் பட்டினி எந்த நேரத்திலும் ஏற்படக் கூடும்
2024-03-19 09:58:47

பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே உள்ள நடப்பு சுற்று மோதலில் இஸ்ரேல் தரப்பின் தொடர்ச்சியான முற்றுகையால், மனித நேய உதவிப் பொருட்கள் காசா பிரதேசத்துக்குள் நுழைய முடியவில்லை. காசா மக்கள் பட்டினியின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். இந்நிலைமையை நிறுத்தாமல் இருந்தால், தற்போது முதல் இவ்வாண்டின் மே மாதம் வரை, காசாவின் வடக்கு பகுதியில் எந்த நேரத்திலும் பட்டினி ஏற்படக் கூடும். எதிர் தரப்பின் நடவடிக்கை நில்லாமல் அதே வேளை பெருமளவிலான மனித நேய உதவிப் பொருட்கள் நுழைய முடியாமல் இருந்தால், காசாவின் பிற பகுதிகளிலும் பட்டினி இடர்பாடு எதிர்கொள்ளப்படும் என்று 18ஆம் நாள் ஐ.நாவின் உலக உணவு மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதே நாள் இவ்வறிக்கை குறித்து ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் குறிப்பிடுகையில், காசா  எதிர்கொள்ளும் மனித நேய பேரழிவு மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மனித நேய உதவிப் பொருட்கள் காசாவில் தடையின்றி போதுமான நிலையில் நுழைவதை இஸ்ரேல் உறுதிப்படுத்த வேண்டுமென குட்ரேஸ் வேண்டுகோள் விடுத்தார்.