பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-அமெரிக்க இளைஞர் பரிமாற்ற நடவடிக்கை
2024-03-19 10:46:06

தூரத்திலிருந்து வரும் நண்பர்கள் என்ற சீன-அமெரிக்க இளைஞர் பரிமாற்ற நடவடிக்கை மார்ச் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பங்கேற்கும் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஒன்றான இந்த நடவடிக்கை, சீன ஊடக குழுமம், அமெரிக்க-சீனா இளைஞர் மற்றும் மாணவர் பரிமாற்ற சங்கம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பிரச்சாரத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ள ஸ்டீலாகூம் நகரின் தலைவர் டிக் முரி, சர்வதேச பரிமாற்றத்திற்கான சீன கல்வி சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஃபூ போ ஆகியோர் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

சீன-அமெரிக்க உறவின் அடித்தளம் மக்களிடையே உள்ளது. நம்பிக்கை மக்களிடையே உள்ளது, எதிர்காலம் இளைஞர்களிடையே உள்ளது, உயிராற்றல் உள்ளூர் இடங்களில் உள்ளது என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இந்த பரிமாற்ற நடவடிக்கையின் மூலம், அனைவரும் நேரடியாக சீனாவை காண முடியும், கேட்க முடியும், சீன உணவுகளைச் சுவைக்க முடியும். அவர்கள் மேலும் நேரடியான மற்றும் ஆழமான உணர்வுகளை பெறுவதாக நான் நம்புகிறேன் என்று ஷென் ஹாய்சியோங் தெரிவித்தார்.