பாலஸ்தீன புதிய தலைமையமைச்சராகப் பதவி ஏற்றுள்ள முஸ்தபாவுக்கு சீனா வாழ்த்துக்கள்
2024-03-19 18:27:36

பாலஸ்தீன அரசுத் தலைவர் அபாஸ் அண்மையில் முகமது முஸ்தபாவை அந்நாட்டின் புதிய தலைமையமைச்சராக நியமித்தார். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் கூறுகையில்,

பாலஸ்தீனத் தலைமையமைச்சராகப் பதவி ஏற்றுள்ள முஸ்தபாவுக்கு சீனத் தரப்பு வாழ்த்து தெரிவித்தது. பாலஸ்தீனத்தின் எதிர்காலம் மற்றும் தலைவிதியுடன் தொடர்புடைய எந்த விஷயங்களும், பாலஸ்தீன மக்களே பாலஸ்தீனத்தை ஆளுவது என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, அந்நாட்டு மக்களின் விருப்பத்தை விரிவாக வெளிப்படுத்தும் வகையில் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தவிர, பாலஸ்தீனத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை வழியாக, உள்நாட்டில் இணக்கம் ஏற்பட சீனா ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.