ரஃபா மீதான இராணுவச் செயல்பாட்டை நிறுத்த இஸ்ரேல் மறுப்பு
2024-03-20 20:40:31

ரஃபா பகுதி மீதான இராணுவச் செயல்பாட்டை நிறுத்தக் கோரிய அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் முன்மொழிவை இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யஹு 19ஆம் நாள் மறுத்து விட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அதே நாள், ஒரு நாள் பேச்சுவார்த்தையை முடித்தபின், இஸ்ரேலின் பிரதிநிதிக் குழு கத்தாரிலிருந்து வெளியேறியது. இச்சூழ்நிலையில், இப்பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த நாடுகளில் ஒன்றான கத்தார்,  பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று கருத்து தெரிவித்ததாக சி.என்.என் கூறியது.

தவிர, அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கரினா ஜீன்-பியர் 19ஆம் நாள் கூறுகையில், இஸ்ரேல் ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் அடுத்த வாரத்தில் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என்று தெரிவித்தார்.