ஆஸ்திரேலியத் துறையினர்களுடன் வாங் யீ பேச்சுவார்த்தை
2024-03-20 14:47:50

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மார்ச் 20ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் அந்நாட்டு தொழில் மற்றும் வணிகம், நெடுநோக்கு முதலிய துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

வாங் யீ கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர அங்க நாடான, ஐ.நா.வுக்கு கட்டணம் செலுத்தும் இரண்டாவது பெரிய நாடான சீனா, பல பிரச்சினைகளை அமைதியான வழிமுறை மூலம் தீர்ப்பதை எப்போதும் ஆதரித்து வருகின்றது. சர்வதேச மற்றும் பிரதேசங்களின் அமைதியையும் நிதானத்தையும் பேணிகாக்கும் வகையில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி வருகின்றது என்றார் அவர்.

வாங் யீ மேலும் கூறுகையில், சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடையிலான கூட்டு நலன், கருத்து வேறுபாடுகளை விட மிக அதிகம். இரு நாடுகளும் பங்காளிகளாக இருக்க வேண்டும். எதிரிகளாக அல்ல. இரு நாட்டு மக்களின் நட்பார்ந்த பரிமாற்றத்தை மேம்படுத்தி, இரு நாடுகளும் ஒன்றுக்குஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டு உறவின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அனைவரும் பங்காற்ற வேண்டும் என்பதைச் சீனா வரவேற்கின்றது என்றார்.