இலங்கையில் 2024ல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள்
2024-03-20 16:31:26

லங்கையில் இவ்வாண்டின் மார்ச் 14ம் தேதி வரை பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 17 ஆயிரத்து 808 பேர் என்று அந்நாட்டு சுற்றுலா வளர்ச்சி ஆணையம் திங்கள் அன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 5 லட்சம் பயணிகளை எட்ட 5 மாதம் தேவைப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரஷியா, இந்தியா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் இலங்கையில் பயணம் மேற்கொண்டோரின் பட்டியலில் முன்னணியில் உள்ளனர்.

இதனிடையே, முதல் 2 மாதங்களில் கிடைத்த சுற்றுலா வருவாய் 68.75 லட்சம் டாலர் என்றும் இது கடந்த ஆண்டை விட 118.2 விழுக்காடு அதிகம் என்றும் அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.