மனிதநேய உதவிப் பொருட்கள் வட காசாவுக்குள் நுழைவதை முன்னேற்ற வேண்டும்:ஐ.நா வேண்டுகோள்
2024-03-20 09:45:00

பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே புதிய சுற்று மோதல் ஏற்பட்டது முதல், இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகையால், மனித நேய உதவிப் பொருட்கள் காசாப் பிரதேசத்துக்குள் நுழைய முடியவில்லை. காசாவின் வடக்குப் பகுதியில் எந்த நேரத்திலும் பட்டினி ஏற்படக் கூடும் என்று ஐ.நாவின் உலக உணவு மன்றம் 18ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வட காசாவில் பட்டினி ஏற்படுவதைத் தவிர்த்து மனித நேய உதவிப் பொருட்கள் காசாவின் வடக்குப் பகுதிக்குள் நுழைவதை முன்னேற்ற, சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நாவின் குழந்தை நிதியம், மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் அலுவலகம், உலக சுகாதார அமைப்பு, செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டி உள்ளிட்ட பல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.